Friday, August 31, 2018

ஹஜ்ஜத்துல் விதாவிலே இறுதிப்பேருரை

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவிலே தனது இறுதிப்பேருரைய நிகழ்த்தியபோது ஒரு ஆன்மீகத் தலைவராக மட்டுமின்றி ஒரு பெரும் நிலப்பரப்பின் ஆட்சியாளராகவும் இருந்தார்கள்.தனது வாகனத்தில் அமர்ந்தவாறு உரையைத் துவங்குமுன் அங்கு குழுமியிருந்த பல்லாயிரம் மக்களிடம் முதலில் கேட்ட கேள்வி முக்கியமானது!
மக்களே!நாளை மறுமையில் இறைவன் உங்களை விசாரிக்கும் முன் என்னைப்பற்றி உங்களிடம் கேடபான்..
அப்போது என்ன கூறவீர்கள்?

சத்திய சஹாபாக்கள் கண்ணீர் சிந்தியபடி,அல்லாவுடைய தூதரே!தாங்கள் தங்களுக்கிடப்பட்ட பணியை முழுமையாக நிறைவற்றினீர்கள்..செய்திகள்அனைத்தையும் ஒளிவுமறைவின்றி எத்தி வைத்தீர்கள் என்றுதான் பதிலிறுப்போம் என உரைத்தபோது
நபிகளார் தனது கைகளை வானை நோக்கி உயர்த்தியபடி
இறைவா..இதற்கு நீயே சாட்சி என மூன்றுமுறை கூறினார்கள்.

சத்திய மார்க்கத்தில் இணைந்தபின் எக்காலத்திலும் இணைவைப்பின் பக்கம் திரும்பிவிடாதீர்கள்.
அல்லாஹ் கண்ணியப்படுத்திய எந்த ஒரு ஆன்மாவையும் அநியாயமாக கொலை செய்துவிடாதீர்கள்.
விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்.
உங்கள் மனைவியர் அல்லாஹ் ஒப்படைத்த அமானிதம்.அவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள்.
இந்தமாதமும் இந்த நாளும் இந்த நகரமும் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்கள் ஒவ்வொருவருட மானமும் கவுரவமும் புனிதமானது.
வட்டியை முழுமையாக தடை செய்கிறேன்.
உங்கள் இறைவன் ஒருவனே!
உங்கள் தந்தையும் ஒருவரே.
ஒரு அஜமியை விட அரபியோ
ஒரு அரபியைவிட அஜமியோ
அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவரல்ல.
இறையச்சம் உடையோரே உயர்ந்தவர்.

சுருங்கச் சொன்னால் இறுதி உரையின் உபதேசங்களை மட்டும் ஒருவர் முழுமையாகப் பின்பற்றினாலே அவர் வெற்றியாளராகி விடலாம்.

TO ACTIVATE DAILY SMS

TO RECEIVE OUR DAILY NEWS LETTER SEND THE FOLLOWING SMS WHICH LINK YOU TO GOOGLE SMS CHANNEL


ON Tamilislamic to +919870807070